மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 26, 2018 | ADDED : ஆக 26, 2018
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டிஆனிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்பேணி உனக்குப் பிரமன் விடு தந்தான்மாணிக் குறளனே தாலேலோ!வையம் அளந்தானே தாலேலோ!(பெரியாழ்வார் பாடிய பாசுரம்)பொருள்: பிரம்மா ஆசையுடன் கொடுத்த மாற்றுக் குறையாத பொன்னால் ஆன தொட்டிலில் மாணிக்கமும், வைரமும் பதிக்கப் பட்டிருக்கின்றன. மிகவும் குறுகியவனாக அவதரித்த வாமனமூர்த்தியே! திரிவிக்ரமனாய் மூவுலகங்களை அளந்தவனே! இந்த தொட்டிலில் உறங்கி மகிழ்வாயாக!