உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைபுந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.(திருமூலரின் திருமந்திர பாடல்)பொருள்: ஐந்து கரங்களைக் கொண்டவரே! ஆனை முகத்தவரே! நிலாவின் இளம்பிறை போன்ற வளைந்த தந்தம் பெற்றவரே! சிவபெருமானின் மூத்த பிள்ளையே! ஞானக் கொழுந்தாக விளங்குபவரே! உம்மை என் புத்தியில் வைத்து வணங்குகின்றேன்.