உள்ளூர் செய்திகள்

ஸ்ரீசங்கர விஜயம் (பகுதி-2)

அகவற்பாவால் எழுதப்பட்ட ஜகத்குரு ஆதிசங்கரர் வரலாறு. இயற்றியவர் நா.நடராஜன். காஞ்சி மஹாபெரியவர் மடாதிபதியாக பொறுப்பேற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி ஜாம்ெஷட்பூரில் நடந்த பொன்விழாவில் 1957 மார்ச் 13 - 16ல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.தக்ஷணம் காணாது தவியாய்த் தவித்தாள்நெல்லிக்கனி யொன்று கையிற் கிடைத்ததைமெல்லியள் அன்புடன் இட்டனள் பிைக்ஷயாய்,அய்யன் கண்டார் அவள்தன் அன்பைமெய்யான கருணை மிகக் கொண்டார் உடனேஅந்தணர் தம்பதியை ஆட்கொண்ட வறுமையைஅப்பொழுதே போக்கிட ஆர்வம் மிக்ககொண்டார்மனதிலே நினைந்தார் மகாலெக்ஷ்மியைகணமதே சொரிந்தார் 'கனகதாரா ஸ்தோத்திரம்',தங்கக்கனிகள் பொழிந்தன அங்கேபொங்கியது செல்வம் பொலிந்தது இல்லம்,மகனுக்கோர் மணம் செய்வித்து மகிழமனதிற் கொண்டாள் மாதா ஆர்யாம்பிகை.சங்கரரோ வெனில் சன்யாசம் ஏற்கசந்தர்ப்பமொன்றை சடுதி கைக்கொண்டார்தாயும் மகனும் தனி நீராடுகையில்சேயின் காலையோர் முதலை பிடித்தது.அலறினாள் தாயும் அழுது துடித்தாள்பதறினாளங்கே பயம் மிக்ககொண்டு'சன்யாச ஆச்ரமம் நானேற்க நீங்கள்சம்மதம் தந்தால் சங்கடம் தீரும்கவலைப்படாதீர் கண்ணீர் விடாதீர்முதலையின் வாக்கிது முடிவைச் சொல்லுவீர்'.எனவே பகர்ந்தார் இளைஞன் சங்கரர்.'அப்பா மகனே அருமைச் செல்வமே.இப்போ உனை நான் எப்படிப் பிரிவேன்உன்னைத் தவிரவே உற்றதோர் மகனுண்டோதன்னந்தனியாய் தவித்திட விடாதே'என்றிப்படி வருந்தினாள் ஏங்கியே தாயும்.ஒன்றிய தாயின் சொற் கேட்டு சங்கரர்'வருந்தாதீர் அம்மா வேறு மகன் இல்லையெனஅருந்தவப்பயனெதுவும் அவலமேயாகாதுஅன்னைக்குரிய அந்திய கருமங்களைநேம முறைப்படி நிச்சயம் செய்வேன்சன்மார்க்க வழியில் சன்யாசம் ஏற்கசடுதியிலெனக்கு விடைதந்திடுவீர்'எனவே புகல மனமிளகி த்தாயும்புத்திரன் பிழைத்தால் போதுமென்றெண்ணிசம்மதம் தந்தாள் சன்யாஸம் ஏற்க.நர்மதை நதிக்கரையில் மலைக்குகையொன்றில்நற்றவமிருந்தார் ஸ்ரீ கோவிந்தபகவத் பாதர்நாடினாரவரை நலமிகு சங்கரர்நற்குருவாகவே ஏற்கும் எண்ணத்துடன்சற்குரு சங்கரர் சமீபம் சென்றார்நிஷ்டையிலிருந்தார் இஷ்டகோவிந்தர்விரைவாய் நர்மதையில் வந்த வெள்ளமதுவிழுங்கியே சென்றது வெகுவாய் கிராமங்களைவெள்ளத்தை யுடனே வேகமாய் கடத்தில்உள்ளடக்கினார் உத்தமர் சங்கரர்.அபாயம் நீங்கிய ஆனந்தக்கூத்தில்ஆரவாரித்தனர் அக்கிராம வாசிகள்நிஷ்டை கலைந்து நோக்கிய கோவிந்தர்சிரேஷ்டன் சங்கரன் நிற்கக்கண்டார்'உணர்ந்தாரவர் மகிமை உள்ளம் மகிழ்ந்தார்உவகையுடனவரை ஏற்றார் சீடனாய்.காசியில் தங்கியகாலையில் சங்கரர்நேசமுடன் சீடருக்கு நித்தயமங்கேஆத்மஸ்வருப தத்துவமடங்கியஉபதநிஷதங்களை உபதேசித்தார்.கங்கையிலொருநாள் நீராடி வந்தசங்கரரெதிரில் சண்டாளனொருவன்நான்கு நாய்களுடன் நண்ணியே வந்தான்.ஆங்கவர் அவனை விலகப்போ எனஉரக்கக்கூறிட உரு சண்டாளன்'உமதுபதேசம் அந்தோ பரிதாபம்!சொல்லினிலின்றி செயலில் காணேன்நல்லது நல்லதென' நகைத்தானவனே.அவன் சொல் கேட்ட ஆச்சாரியர் சங்கரர்அப்பொழுதேயங்கு ஐந்து ஸ்லோகங்களாம்மனீஷா பஞ்சகமெனும் மகாமந்திரத்தால்வேதாந்த தத்துவமதை விளங்கவைத்தார்.அதுகேட்ட சண்டாளன் அக்கணம் மறைந்தான்அனுக்கிரகத்தான் அவர் முன் காசி நாதனாய்.ஆதி சங்கரரிடம் அதிபக்தி கொண்டவர்வேதியர் ஸநந்தர் எனுமொரு சிரேஷ்டர்அவர்தம் மகிமையை அயலார் அறியநிகழ்ந்ததோர் சம்பவம் நீவிரதைக்கேளீர்.நீர்ப்பிரவாகம் நிறைந்த கங்கையின்அக்கரை நின்ற அந்தணர் ஸநந்தரைஅழைத்தார் சங்கரர் தன்னிடம் வரவேதயக்கம் கொள்ளா ஸநந்தர். ஆற்றில்இறங்கி நடந்தார் இறைவன் ஆக்ஞைப்படி.தாமரை யொவ்வொன்று அவர் தடம் தாங்கிதாண்டி வரச்செய்தது தவ சிரேஷ்டரை.அவர் குரு பக்தியை அகமகிழ்ந்து போற்றிபத்மபாதர் எனப்பட்டம் சூட்டித்தன்உத்தம சீடனாய் ஏற்றார் சங்கரர்.-தொடரும்