சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : பிப் 09, 2018 | ADDED : பிப் 09, 2018
1. ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர்.......திருஞானசம்பந்தர்2. நெஞ்சு விடு துாது என்னும் சைவ சாஸ்திர நுாலை எழுதியவர்......உமாபதி சிவாச்சாரியார்3. தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றிய நாயன்மார்........நமிநந்தியடிகள்4. சுந்தரர் தேவாரத்தை........ என்று குறிப்பிடுவர்திருப்பாட்டு5. இலங்கையிலுள்ள இரண்டு தேவாரதலங்கள்......திரிகோணமலை, திருகேதீச்சரம்6. மயில் வடிவில் சிவனை பூஜித்த அம்பிகை........மயிலாப்பூர் கற்பகாம்பாள்7. திங்களன்று சிவராத்திரி வந்தால் அதை ....... என்று அழைப்பர்.யோக சிவராத்திரி8. அப்பர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் .......திருவையாறு ஐயாறப்பர் கோயில்9. பூலோக கைலாயம் என சிறப்பு கொண்ட கோயில்.........சிதம்பரம் நடராஜர் கோயில்10. ஆடும், யானையும் வழிபட்ட சிவத்தலம்..........திருவாடானை