உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது சிறப்பு. * கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோவிலில் மூலவராக உள்ள கல்கருடன் உலா வருகிறார். * கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி கோயிலில் சங்கு, சக்கர கருடாழ்வார் இருக்கிறார். * நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடியில் இரண்டு கைகளையும் காட்டிய நிலையில் கருடாழ்வார் காட்சி தருகிறார்.* வாழ்வில் தடைகளை போக்க சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் மூலைக்கருடனுக்கு சிதறுகாய் உடைக்கின்றனர்.* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ரங்கமன்னார், ஆண்டாள், கருடாழ்வார் மூவரும் ஒரே இடத்தில் அருள்புரிகின்றனர். இங்கு கருடனின் விசேஷ அந்தஸ்துக்குக் காரணம், பெரியாழ்வாராக அவதரித்து ரங்கமன்னாரின் மாமனார் ஸ்தானத்தில் இருப்பதே. * விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் (திருத்தண்கால்) கோயிலில் பாம்பு, அமிர்த கலசத்துடன் கருடன் உள்ளார். * திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி என்னும் தலத்தில் நம்பாடுவான் என்னும் பக்தனுக்காக கருடனும், கொடி மரமும் சற்று விலகி நின்றது. * துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஒன்பது கருட சேவை நடக்கும். நம்மாழ்வாரின் அவதார விழாவின் 5ம் நாளில் நவதிருப்பதிகளிலுள்ள உற்ஸவர்கள் (ஒன்பது பெருமாள்) ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளி காட்சியளிப்பர். * திருப்பதி மலைக்கு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து சுவாமி புஷ்கரணி என்ற குளத்தைக் கொண்டு வந்தவர் கருடன்.* திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் ஏழடி உயர கருடன் நின்ற கோலத்தில் பாம்பை அணிந்த நிலையில் உள்ளார்.