சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணர்.* கிருஷ்ணர் நள்ளிரவு 12:00 மணிக்கு மதுராவிலுள்ள சிறைச்சாலையில் பிறந்தார். * வசுதேவர் - தேவகி தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கிருஷ்ணர். * கர்க முனிவர் தலைமையில் கிருஷ்ணரின் பெயர் சூட்டு விழா நடந்தது. * தாயாக இருந்து கிருஷ்ணருக்கு தாலாட்டு பாடிய ஆழ்வார் பெரியாழ்வார். * பாகவதம் என்னும் நுாலில் பத்தாம் காண்டத்தில் கிருஷ்ணரின் வரலாறு இடம் பெற்றுள்ளது. * பாகவதத்தின் பத்தாம் காண்டத்தை 'சர்க்கரை பந்தலில் தேன்மழை' என போற்றுவர். * கமானிக்யா என்னும் ஜோதிட நுாலில் கிருஷ்ணரின் ஜாதகம் இடம் பெற்றுள்ளது.* கிருஷ்ணர் தன் ஏழாவது வயதில் அசுரனான கம்சனை வதம் செய்தார். * பாம்பு வடிவில் கிருஷ்ணரைக் கொல்ல வந்தவன் அகாசுரன். * ஆயர் சிறுவனாக தோன்றி கிருஷ்ணரைக் கொல்ல வந்தவன் பிரலம்பாசுரன். * ஆயர்பாடியில் கிருஷ்ணரின் பால்ய நண்பர்கள் ஸ்ரீதாமா, ஸுபலா, ஸ்தோக கிருஷ்ணா * மருதமரமாக இருந்து கிருஷ்ணரால் சுயவடிவம் பெற்றவர்கள் நளகூபன், மணிக்ரீவன்* கிருஷ்ண தரிசனம் பெற பூலோகம் வந்த பசு சுரபி* பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் கிருஷ்ணர் ஆடியது ராஸ நடனம்* ராஸ நடனம் என்பதற்கு பல பெண்களுடன் நடனமாடுவது என பொருள். * ஆயனுக்காக (கண்ணனுக்காக) கனவு கண்ட பெண் ஆழ்வார் ஆண்டாள்.* கிருஷ்ணர் மீது ஜயதேவர் பாடிய ஸ்தோத்திரம் கீதகோவிந்தம். * குருவாயூரப்பன் மீது நாராயணீயம் பாடியவர் நாராயண பட்டத்திரி* ஆதிசங்கரர் பாடிய கிருஷ்ணர் பாடல்கள் பஜகோவிந்தம், நந்த நந்தன அஷ்டகம்* மதுரா சிறையில் பிறந்த கிருஷ்ணரே அந்நாட்டின் மன்னராக ஆட்சி புரிந்தார். * கிருஷ்ணனால் புதிதாக உருவாக்கப்பட்ட நகரம் துவாரகை. * இரவில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்வது மிகவும் சிறப்பு.