உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

* ஆண்டாளின் சகோதரராக கருதப்படுபவர் ராமானுஜர். * விஷ்ணு வழிபாட்டிற்குரிய ஆகமங்கள் பாஞ்சராத்ரம், வைகானஸம்* வைகுண்டத்தில் எல்லையில் ஓடும் நதியின் பெயர் விரஜா* ஸ்ரீவைகுண்ட கத்யம் என்னும் நுால் வைகுண்டத்தின் சிறப்பை வர்ணிக்கிறது.* ராவணனிடம் இருந்து சீதையை விடுவிக்க போராடி உயிர் நீத்தவர் ஜடாயு* பத்ரி நாராயணன் என்பதற்கு இலந்தையடிப் பெருமாள் என்பது பொருள். * ஆச்சாரியார்கள் வழிபட்ட கோயில்களை அபிமானத்தலம் எனக் குறிப்பிடுவர். * நாலாயிர திவ்ய பிரபந்த பாடலைத் தொகுத்தவர் நாத முனிகள். * திருஞான சம்பந்தரிடம் வேலினைப் பரிசாகப் பெற்றவர் திருமங்கையாழ்வார்.* துாதுவளைக்கீரை மூலம் ஆளவந்தாருக்கு துாது அனுப்பியவர் மணக்கால்நம்பி. * திருவிளையாடல் புராணத்தை தமிழில் எழுதியவர் பரஞ்ஜோதி முனிவர்* திருவிளையாடல் புராணத்தின் மூல நுால் ஹாலாஸ்ய மகாத்மியம்* திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்த பெண் மங்கையற்கரசி* ஆறு படைவீடுகளில் நான்காம் தலம் சுவாமிமலை.