சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
* தேவாரம் பாடிய மூவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்.* மன்னர் அநபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு. * ஆமை சிவனை பூஜித்த தலம் திருமணஞ்சேரி.* பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்.* சிவபெருமானின் திருக்கோலங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் சோமாஸ்கந்தர்.* பஞ்சாட்சர மந்திரத்தை தமிழில் திருவைந்தெழுத்து எனக் குறிப்பிடுவர். * சிவனடியாருக்கு அன்னமும், பொருளும் தானம் அளித்தவர் சிறப்புலி நாயனார்.* சிவனுக்கு மலர்த்தொண்டு புரிந்தவர் முருக நாயனார்.* ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர்.* நெஞ்சுவிடு துாது என்னும் சைவ சாஸ்திரநுாலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.* தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றியவர் நமிநந்தியடிகள்.* பன்னிரு திருமுறைகளில் சுந்தரரின் தேவாரத்தை திருப்பாட்டு எனக் குறிப்பிடுவர்.* இலங்கையிலுள்ள இரண்டு தேவாரத்தலங்கள் திரிகோணமலை, திருகேதீச்சரம்.* மயில் வடிவில் சிவபெருமானை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள்.* திங்களன்று சிவராத்திரி வந்தால் அதற்கு 'யோக சிவராத்திரி' என்று பெயர்.* திருநாவுக்கரசர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் திருவையாறு ஐயாறப்பர் கோயில்.* பூலோக கைலாயம் என போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோயில்.* ஆடும், யானையும் சிவபூஜை செய்த திருத்தலம் திருவாடானை.