உள்ளூர் செய்திகள்

சுக்கிரன் 108 போற்றி

வெள்ளிக்கிழமைகளில் செல்வவளம், நல்ல வாழ்க்கைத் துணை வேண்டியும், சுக்கிர திசையால் பாதிப்பு இருந்தால் அதைக் குறைக்கவும் இந்த போற்றியைச் சொல்லலாம்.1.ஓம் அசுர குருவே போற்றி2.ஓம் அரியசக்தி வாய்ந்தவனே போற்றி3.ஓம் அழகனே போற்றி4.ஓம் அரங்கத்து அருள்பவனே போற்றி5.ஓம் அந்தணனே போற்றி6.ஓம் அத்தி சமித்தனே போற்றி7.ஓம் அவுணர் அமைச்சனே போற்றி8.ஓம் அந்தகனுக்கு உதவியவனே போற்றி9.ஓம் ஆறாம் கிரகனே போற்றி10.ஓம் ஆச்சாரியனே போற்றி 11.ஓம் இருகரனே போற்றி12.ஓம் இனிப்புச் சுவையனே போற்றி13.ஓம் இந்திரியமானவனே போற்றி14.ஓம் இல்லறக் காவலே போற்றி15.ஓம் இரு பிறையுளானே போற்றி16.ஓம் ஈர்க்கும் மீனே போற்றி17.ஒம் உல்லாசனே போற்றி18.ஓம் உற்றோர்க் காவலே போற்றி19.ஓம் ஒரு கண்ணனே போற்றி20.ஓம் ஒளி மிக்கவனே போற்றி21.ஓம் கசன் குருவே போற்றி22.ஓம் கசனால் மீண்டவனே போற்றி23.ஓம் கலை நாயகனே போற்றி24.ஓம் கலைவளர்ப்போனே போற்றி25.ஓம் கருடவாகனனே போற்றி26.ஓம் கமண்டலதாரியே போற்றி27.ஓம் களத்ர காரகனே போற்றி28.ஓம் கயமுகன் தந்தையே போற்றி29.ஓம் காவியனே போற்றி30.ஓம் கனகம் ஈவோனே போற்றி31.ஓம் கீழ்திசையனே போற்றி32.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி33.ஓம் கிரகாதிபனே போற்றி34.ஓம் சடை முடியனே போற்றி35.ஓம் சங்கடம் தீர்ப்போனே போற்றி36.ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி37.ஓம் சந்திரன் ஆகானே போற்றி38.ஓம் சத்ரு நாசகனே போற்றி39.ஓம் சிவனடியானே போற்றி40.ஓம் சிவன் உதரத்து இருந்தவனே போற்றி41.ஓம் சுக்கிரனே போற்றி42.ஓம் சுந்தரனே போற்றி43.ஓம் 'சுக்கிர நீதி' அருளியவனே போற்றி44.ஓம் சுரர்ப் பகைவனே போற்றி45.ஓம் சுகப்பிரியனே போற்றி46.ஓம் செழிப்பிப்பவனே போற்றி47.ஓம் தவயோகனே போற்றி48.ஓம் ததீசியை உயிர்ப்பித்தவனே போற்றி49.ஓம் திங்கள் பகையே போற்றி50.ஓம் திருவெள்ளியங்குடித் தேவனே போற்றி51.ஓம் துலாராசி அதிபதியே போற்றி52.ஓம் திருநாவலூரில் அருள்பவனே போற்றி53.ஓம் தேவயானி தந்தையே போற்றி54.ஓம் தூமகேதுக்கு அருளியவனே போற்றி55.ஓம் நாடப்படுபவனே போற்றி56.ஓம் நாடளிப்பவனே போற்றி57.ஓம் நாற்கரனே போற்றி58.ஓம் நீண்ட தசாகாலனே போற்றி59.ஓம் நுண்கலைத் தேவனே போற்றி60.ஓம் நெடியவனே போற்றி61.ஓம் பரணி நாதனே போற்றி62.ஓம் பல்பிறவி எடுத்தவனே போற்றி63.ஓம் பத்துபரித்தேரனே போற்றி64.ஓம் பஞ்சகோணப்பீடனே போற்றி65.ஓம் பிரகாசிப்பவனே போற்றி66.ஓம் பிருகு குமாரனே போற்றி67.ஓம் பின்னும் சுழல்வோனே போற்றி68.ஓம் பிள்ளை நான்குடையவனே போற்றி69.ஓம் புதன் மித்ரனே போற்றி70.ஓம் புகழளிப்பவனே போற்றி71.ஓம் புதனருகிலிருப்பவனே போற்றி72.ஓம் பூமியன்ன கோளே போற்றி73.ஓம் பூரத்ததிபதியே போற்றி74.ஓம் பூராட நாதனே போற்றி75.ஓம் பெண்பால் கிரகமே போற்றி76.ஓம் பேராற்றலானே போற்றி77.ஓம் மழைக் கோளே போற்றி78.ஓம் மலடு நீக்கியே போற்றி79.ஓம் மரவுரி ஆடையனே போற்றி80.ஓம் மாமேதையே போற்றி81.ஓம் மாண்டு மீண்டவனே போற்றி82.ஓம் மாய்ந்தவரை மீட்பவனே போற்றி83.ஓம் மாவலியின் குருவே போற்றி84.ஓம் மாலோடு இணைந்து அருள்பவனே போற்றி85.ஓம் மீனத்தில் உச்சனே போற்றி86.ஓம் மிருத்யு நாசகனே போற்றி87.ஓம் மோகனனே போற்றி88.ஓம் மொச்சைப் பிரியனே போற்றி89.ஓம் யயாதி மாமனே போற்றி90.ஓம் எம பயம் அழிப்பவனே போற்றி91.ஓம் ரவிப் பகைவனே போற்றி92.ஓம் ரிஷப ராசி அதிபதியே போற்றி93.ஓம் வண்டானவனே போற்றி94.ஓம் வரத ஹஸ்தனே போற்றி95.ஓம் வள்ளி அதிதேவதையனே போற்றி96.ஓம் வாமனரை உணர்ந்தவனே போற்றி97.ஓம் விடிவெள்ளியே போற்றி98.ஓம் 'விபுதை'ப் பிரியனே போற்றி99.ஓம் வெண்ணிறனே போற்றி100.ஓம் வெள்ளி உலோகனே போற்றி101.ஓம் வெண் குடையனே போற்றி102.ஓம் வெள்ளாடையனே போற்றி103.ஓம் வெண் கொடியனே போற்றி104.ஓம் வெள்ளித் தேரனே போற்றி105.ஓம் வெண்டாமரைப் பிரியனே போற்றி106.ஓம் வைரம் விரும்பியே போற்றி 107.ஓம் 'ஹ்ரீம்' பீஜ மந்திரனே போற்றி108.ஓம் வெள்ளி நாயகனே போற்றி போற்றி