உள்ளூர் செய்திகள்

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

* ஆற்று நீர் போல் ஒரே திசை நோக்கி பயணிக்கும் நல்லவன் லட்சியத்தை அடைவான். * உலகில் பணம்தான் முக்கியம். பணத்தால் தான் உலகமே இயங்குகிறது. * இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்வதே சிறந்த வாழ்க்கை. * வளர்ச்சியும், வீழ்ச்சியும் மனிதனுக்கு நாக்கைப் பொறுத்தே அமைகிறது.* வறுமை, நோய், துன்பம் எல்லாம் அவரவர் செய்த பாவம் என்ற மரத்தில் பழுக்கும் பழங்கள். * உறவினரைக் கஷ்ட காலத்திலும், நண்பனை ஆபத்து நேரத்திலும், மனைவியை நோயில் வாடும் போதும் தான், அவரவரின் உண்மையான குணத்தை அறிய முடியும்.* முட்டாள்தனமான செயல்கள் மனதிற்கு பெரும் துன்பத்தை விளைவிக்கும். * மனதில் நினைப்பதை வெளியே சொல்லாமல் நிறைவேற்றுபவனே வெற்றியாளன். * சிறிது சிறிதாக படித்தால் கூட முட்டாளும் அறிவாளியாக மாறுவான். * எப்போதும் பிறந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணால் குடும்ப அமைதி கெடும். * சிறந்த ஆலோசனை சொல்லும் அமைச்சர் இல்லாத அரசு சீக்கிரமே நஷ்டமாகும்.* கடவுள் அருள் இல்லாவிட்டால் சிறிய செயலைச் செய்வது கூட பெரும் சவாலாக இருக்கும்.* அரசர், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, மடையன் ஆகியோரோடு வாக்குவாதம் செய்யக் கூடாது.சபதமிடுகிறார் சாணக்கியர்