உள்ளூர் செய்திகள்

நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்

* உன்னிடம் தீவிர நம்பிக்கை இருந்தால், நீ தேடுவது கிடைத்தே தீரும். * நீ செய்யும் வழிபாடு ஒருநாள் நிச்சயம் பலன் தரும். * ஆசையை அகற்றி உன் கடமையை செய். * முற்பிறவியில் நீ நடந்து கொண்டதற்கு ஏற்பவே, இந்தப்பிறவியில் எல்லாம் நடக்கிறது. * பலன் கருதாமல் செய்யும் வேலையே உயர்வானது. * அறிவு பலவீனமானது. நம்பிக்கை பலமானது.* ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது. அதுபோல் ஆசை உள்ளவனுக்கு கடவுள் அருள் கிடைக்காது. * நல்லவர்களுடன் பழகு. மனதில் நல்ல எண்ணம் உருவாகும். * பெண்கள் அனைவருமே அன்னை பராசக்தியின் அம்சம்.* கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே, ஒருவர் அறியாமையில் இருந்து விடுபட முடியும். * தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு உதவும்.* அமைதியாக இருப்பதே ஞானத்தின் முதல் அடையாளம்.* எந்த நிலையிலும் கலங்காதவனே உண்மையான ஞானி.* பொய் இருக்கும் இடத்தில் தீமைகள் இருக்கும்.* பக்தி மார்க்கமே கடவுளை அடைய எளிய வழி. * கடவுளை ஆராய்ச்சி செய்யாதே. அவர் திருவடியில் சரணடைந்து விடு.* பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை காண மனம் ஏங்க வேண்டும்* கற்பக விருட்சம் போல வாரி வழங்கும் வள்ளலே கடவுள். * ஒரு விஷயத்தை கேட்பதை விட நேரே காண்பது சிறப்பு.* நல்லவர்களின் சேர்க்கையால் மனம் செம்மை பெறும்.ஊக்கப்படுத்துகிறார் ராமகிருஷ்ணர்