மணக்கோல சிவன்
UPDATED : பிப் 20, 2025 | ADDED : பிப் 20, 2025
பிப். 26 - மகாசிவராத்திரிவடமாநிலக் கோயில்களில் பக்தர்கள் சுவாமிக்கு பூஜை செய்வது போல, மதுரை அழகப்பன் நகரிலுள்ள மூவர் ஆலயத்தில் நாம் பூஜை செய்யலாம். இங்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளிக்கிறார். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களைச் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு சன்னதி இருப்பதால் 'மூவர் ஆலயம்' என அழைக்கின்றனர். இங்கு மகாசிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கருவறையில் மூலவரின் பின்புறம் மகாவிஷ்ணுவும், மணக்கோலத்தில் மீனாட்சியம்மன், சொக்கநாதரும் உள்ளனர். விநாயகர் முதல் அனுமன் வரை எல்லா தெய்வங்களும் புன்னகை ததும்ப இங்கே காட்சி தருகின்றனர்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள கனக துர்கைக்கு இங்கு சன்னதி உள்ளது. வெள்ளி அன்று ராகு காலத்தில் (காலை 10:30 - 12:00 மணி) அம்மனை வழிபட்டால் திருமணத்தடை விலகும். தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். செவ்வாய், வெள்ளியன்று பெண்களும், மற்ற நாட்களில் ஆண்களும் கருவறைக்குள் சென்று பூஜை செய்கின்றனர். கோலம் இடுவது, மணியடிப்பது, மடைப்பள்ளியில் சமைப்பது, கோயிலைத் துாய்மைப்படுத்துவது என அனைத்து பணிகளையும் பக்தர்களே செய்கின்றனர்.எப்படி செல்வது: மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் 4 கி.மீ., துாரத்தில் உள்ள அழகப்பன் நகரில் கோயில் உள்ளது. விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி.நேரம்: அதிகாலை 5:30 - 10:30 மணி; மாலை 5:30 - 8:30 மணிதொடர்புக்கு: 94431 06262அருகிலுள்ள கோயில்: திருப்பரங்குன்றம் முருகன் 3 கி.மீ., (திருமணம் நடக்க...)நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 0452 - 248 2248