நிம்மதியாக வாழ...
கமலநாத பிரசாத் சுவாமிகள், 'ஆர்கான்' என்னும் ஆசிரமத்தை பெங்களூரு ராம்நகர் கனகபுராவில் நடத்தி வருகிறார். இவரது தந்தை உயர் அதிகாரி என்பதால் இளம்வயதில் பல நகரங்களில் வாழ்ந்தவர். ஒருமுறை இவரது கனவில் மந்த்ராலயம் ராகவேந்திர சுவாமிகள், 'என்னை தரிசிக்க நீ வருவாயா' எனக் கேட்டார். ஆனால் பொருட்படுத்தவில்லை. பின்னர் 15 நாட்களுக்குப் பின் மீண்டும் அதே கனவு. உடனே மந்திராலயம் சென்றார். ராகவேந்திரரால் ஈர்க்கப்பட்டு அங்கேயே தங்கினார். எம்.ஏ., உளவியல் படித்த இவர் 53ம் வயதில் துறவு தீட்சை பெற்றார். ஆனால் ஆசிரமம் கட்ட இடம் இருந்தாலும், கட்டடம் கட்ட பணமில்லை. சனாதன தர்மத்தை பரப்புவதே இவரது குறிக்கோள். கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார். கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஆன்மிக முகாம், தெய்வீக திருமணங்கள் நடத்துகிறார். உபதேசங்கள் * சனாதன தர்மம் என்பது நம் அன்றாட வாழ்க்கை முறை. * காவி அணிந்தவர் மட்டும் துறவியல்ல; கடவுளை நேசிப்பவர் அனைவரும் துறவியே. * கிருஷ்ணர், ராமர், ராகவேந்திரர் என எல்லா அவதாரங்களும் கடவுளே. * கடவுளை நேசிப்பவர்கள், மற்றவர்களை துன்புறுத்த மாட்டார்கள். * பேராசையைக் கைவிட்டால் நிம்மதியாக வாழலாம். * கடவுளின் பெயரைச் சொன்னால் துன்பம் வராது.* அன்பு என்னும் தெய்வீக உணர்வால் உலகையே வெல்லலாம். * கடவுளை தியானிப்பதன் மூலம் எதிர்காலத்தை கணிக்க முடியும். * எல்லா பிரச்னைக்கும் ஆன்மிகம் மூலம் தீர்வு காணலாம். * இறப்புக்கு பின் உடலில் இருந்து ஆன்மா பிரிகிறது. இறுதிச்சடங்கின் போது, 'நான் இறக்கவில்லை; உயிரோடு தான் இருக்கிறேன்' என ஆன்மா சொன்னாலும் யாருக்கும் கேட்காது.நேரம்: காலை 11:00 - 1:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி முகவரி: 63, Akshata, 3rd Main, 4th cross, Mico Layout, 1st Stage, Arakere, Bannerghatta Road, Bengaluru - 560 076.அலைபேசி: 99127 99931 இணையதள முகவரி: prasad.agali@gmail.com