உள்ளூர் செய்திகள்

அன்பே உலகின் மகாசக்தி

* அன்பே உலகின் மகாசக்தி. இதை அறிந்தவன் வாழ்வே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். * நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம்.* உதடுகள் அரண்மனைக்கதவு போல பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதில் இருந்து வரும் சொல் அமைதியை தந்தால் போதும். * உலகத்தை அறியும் முன் முதலில் உன்னை அறிந்துகொள். * பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.* மனதின் பிரச்னைகளை சரி செய்ய தியானமே சிறந்த வழி.* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சிக்கு அசையாதவனே அறிஞன்.* பேராசையை அழித்தால் தாமரை இலை தண்ணீர் போல துன்பம் உன்னை நெருங்காது. * எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பது தான் பண்பட்ட மனிதனின் அடையாளம்.* உடல், நாக்கு, மனம் என மூன்றையும் அடக்குபவனே உண்மையான அடக்கம் கொண்டவன். * உனக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் உனது செயல்களே காரணம். * உங்களின் பேச்சு சமாதானத்திற்கு துணை நிற்கட்டும்.* பொய்யை உண்மையாக திரித்து கூறி பிறர் மனம் நோகும் விதத்தில் பேச வேண்டாம். என்கிறார் புத்தர்