தோல் நோய் போக்கும் தூயவன்
யாருக்குத்தான் பிரச்னை இல்லை. எல்லோருக்கும் அவரவருக்கு தகுந்தால் போல பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. அதை அந்த நேரத்தில் எப்படி கடக்கலாம் என நினைக்கிறார்களே தவிர அதனை முற்றிலும் போக்க யாரும் முயற்சிப்பதில்லை. முழுவதுமாக நீங்க வேண்டுமா... மத்திய பிரதேசம் படியா உனாவ் என்னும் தலத்தில் சூரியபகவானை வழிபடுங்கள். இங்கு விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் இருக்கும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார். அவரிடமுள்ள பசு ஒன்று தொடர்ந்து ஒரு புதரில் சென்று பாலினை சொரியும். சூரிய பகவானை தினசரி தவறாமல் வழிபடும் ஒருவர் அதனை விரட்டி அடிக்க பசுவானது பதறி பக்கத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து இறந்தது. பசுவின் இறப்பிற்கு காரணம் இவர் தான் என அவ்வூர் தலைவர் முன் குற்றம் சாட்டினார் விவசாயி.இதனால் குழப்பத்தில் இருந்த அவர் கனவில் சூரிய பகவானே தோன்றி பால் சொரிந்த இடத்தில் நான் சிலையாக இருக்கிறேன். எனக்கு நித்திய வழிபாடு செய் என சொல்லி மறைந்தார். அதன் படி அவர் சிறு கோயிலைக் கட்டினார். விவசாயி குடும்பமே வழிவழியாக குருக்களாக இருந்து வருகின்றனர். எங்கும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு கோயில் பொலிவுடன் திகழ்கிறது. கருவறையில் சிறிய அளவில் காட்சி தரும் சுவாமியின் திருநாமம் பாலாஜி சூரியன். இவரின் பெருமையை அளவிட்டு சொல்ல முடியாது. கோயிலுக்கு எதிரே அமைந்த குளத்தில் ஆவணி ஞாயிறு தோறும் நீராடி சுவாமியை தரிசனம் செய்பவருக்கு தோல் நோய் நீங்கும் என்பது இங்குள்ளோர் கண்ட உண்மை. மாதப்பிறப்பு தோறும் பாலாஜி சூரியனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹிதந்நோ சூர்யப் ப்ரசோதயாத்என்ற சூரிய காயத்ரி மந்திரத்தை சொல்லி இருந்த இடத்தில் இருந்து அவரின் அருளை பெறுவோம்.எப்படி செல்வது: ஜான்சியில் இருந்து 17 கி.மீ.,விசேஷ நாள்: ஞாயிற்றுக்கிழமை வருடப்பிறப்பு நேரம்:காலை 7:00 -- இரவு 7:00 மணிதொடர்புக்கு: 99072 26668அருகிலுள்ள தலம்: உஜ்ஜயினி மகாகாலேஸ்வரர் கோயில் 440 கி.மீ.,நேரம்: அதிகாலை 3:00 மணி - இரவு 11:00 மணிதொடர்புக்கு: 0734 - 255 0563