உள்ளூர் செய்திகள்

நல்லதை செய்... நல்லவனாக இரு...!

ஏப்.24 சாய்பாபா ஸித்தி தினம்* நல்லதை செய். நல்லதை பார். நல்லவனாக இரு. இதுவே கடவுளை அடையும் வழி. * அனைவரின் வாழ்வும் ஒன்று தான். உன்னைபோலவே மற்றவர்களையும் நேசி. * பணம் வரும், போகும். ஒழுக்கம் வரும், வளரும். * மதிப்பையும், மரியாதையையும் கேட்டுப் பெறக்கூடாது. ஆனால் கடவுளிடம் நாம் வெற்றி பெறுவதற்கான வழியை கேட்டுப் பெறலாம். * கடவுள் அன்பானவர். எனவே அன்பையே வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். * சுயநலமற்ற வகையில் மனித சமுதாயத்திற்கு ஏதாவது சேவை செய்கிறாயா என்று கடவுள் தனது ஆயிரம் கண்களைக் கொண்டு உன்னை கவனித்து கொண்டிருக்கிறார். * நீ ஒழுக்கசீலனாக இருந்தால், உனது உடல் பிரகாசமாக இருக்கும். சமூக சேவையும், கடவுள் வழிபாடும் உன் உடல் அழகிற்கு பாதுகாப்பாக இருக்கும். * இதுவரை செய்திராத, இனியும் செய்ய முடியாத ஒரு பொருளே மனிதன்! மனிதப்பிறவியே மிக உயர்ந்த பிறவி. * அமைதியான மனமுடையவர், சிறந்த உடல் நலத்துடன் விளங்குவார். சிறந்த உடல் நலம் உடையவருக்கு அமைதியான உள்ளம் இருக்கும். * பிறருக்கு கொடுப்பதாலும், மன்னிக்கும் குணத்தாலும் அன்பு நிலைத்திருக்கும். பிறரிடமிருந்து பெறுவதாலும், நன்றி மறக்கும் குணத்தாலும் சுயநலமே எஞ்சியிருக்கும்.* அன்பு சுயநலமில்லாதது. சுயநலத்திற்கு அன்பென்ற வார்த்தைக்கு பொருளே புரியாது.* எல்லா செயல்களுமே கடவுளால் தான் நிகழ்கின்றன. அவரே உணர வைக்கிறார், உதவுகிறார், நிர்வகிக்கிறார், மகிழ்ச்சியடைய செய்கிறார், மன்னிக்கிறார், விதைக்கிறார், அறுக்கிறார்.* மனதில் அமைதி புகுந்து விட்டால், அதை அசைக்க யாராலும் முடியாது. அமைதிக்கு மட்டுமே இத்தகைய தனித்தன்மை உண்டு. * ஆண்டவனின் கருணை ஆயுள் காப்பீட்டை போன்றது. அது தகுந்த சமயத்தில் உனக்கு அளவற்ற உதவியை செய்யும். * வாழ்க்கை தரம் முக்கியமல்ல. எப்படி வாழ்கிறாய் என்பதே முக்கியம். * மற்றவர்கள் பாராட்ட வேண்டுமே என்பதற்காக உனது சேவை அமைந்து விடக்கூடாது. அது உன் உள்ளத்திற்குள் இருந்து அன்பைச் சுமந்து வரவேண்டும். * கடவுள் உனக்குள் இருக்கிறார், உனது ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும், நினைப்பிலும் இருக்கிறார். நல்லதை பேசி, நல்லதை செய்து, நல்லதை நினைத்து அவரது அன்பிற்கு உன்னை தகுதியானவன் ஆக்கி கொள். * ஒரு மாணவன் கெட்டவனாக இருந்தால், அவன் மட்டுமே பாதிப்பான். ஆனால், ஒரு ஆசிரியர் கெட்டவராக இருந்தால், நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பாழாகி விடும்.* உனது உடலைப் பலப்படுத்து, மனதை சீர்திருத்து. வாழ்வை ஒழுங்குபடுத்து. அப்போது உனது நாடும், வீடும் பலமுள்ளதாகவும், செழிப்புள்ளதாகவும் மாறிவிடும்.* உனக்கு மற்றவர்கள் செய்த தீமையை மறந்து விடு. அதுபோல், நீ மற்றவர்களுக்கு செய்த நன்மையையும் மறந்து விடு. * பணம், நேரம், உணவு மற்றும் ஆற்றலை ஒருபோதும் வீணாக்காதீர்கள். ஆசைகளைக் கட்டுப்படுத்துங்கள். இதுவே நல்வாழ்க்கைக்கான முதல்படி ஆகும்* உணவு உண்ண அமரும் போது எளிமையையும், ஆற்றலின்மையையும் உணர்வோம். உண்டு எழும்போது, வலிமையையும், ஆற்றலையும் உணர்வோம்.* கடவுள் உங்களுக்கு இடம், பொருள், திறமை, வாய்ப்பு, அதிர்ஷ்டம் என அனைத்தையும் கொடுத்திருக்கிறார். அவரே உங்களுக்கு உற்ற தோழனாகவும் இருக்கிறார்* ஒருமுறை மனப்பூர்வமாக இறைவனிடம் சரணடைந்து விட்டால் போதும். அதன்பின் நம்மை பாதுகாக்கும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்வார்.சொல்கிறார் சாய்பாபா