உள்ளூர் செய்திகள்

தடைகளைக் கண்டு அஞ்சாதே! தயங்காமல் போரிடு!

டிச.11 - பாரதியார் பிறந்த நாள்* எதிர்ப்பு, தடைகளைக் கண்டு அஞ்சாமல், போரிடும் துணிச்சல் வேண்டும்.* சத்தியவழி தவறாமல் நடப்ப வனுக்கு கடவுளின் அருளால் வெற்றி கிடைக்கும். * உலகம் முழுவதையும் இயக்கு பவர் கடவுள். அவரே எல்லா உயிர்களாகவும் இருக்கிறார்.* போனது போகட்டும். இனி நடக்க இருக்கும் செயலில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவனே கண் படைத்தவன். * அணு அளவும் பிறரை ஏமாற்றுவதே கிடையாது என முடிவெடுப்பவனே ஈஸ்வரன்.* சகல பாரத்தையும் கடவுள் மீது வைத்து விட்டு நடப்பவனுக்கு தெய்வத் தன்மை உண்டாகும். * குருவி, காக்கை, ஈ, எறும்பு போன்ற பல வீனமான உயிர்களுக்கும் தீங்கு செய்ய கூடாது.* பொழுதை வீணாக்கினால் அதற்கான ஆதாயம் கிடைக்காமல் போகும். இன்று செய்ய வேண்டியதை நாளை என தள்ளிப் போடக்கூடாது.* பேச்சு ஒரு மாதிரியாகவும், செயல் வேறுவிதமாகவும் உள்ளவர்களின் நட்பு வேண்டாம். * முயற்சியின் ஆரம்பத்தில் நம்மை பிறர் குறை சொல்வர். ஆனால் நாளடைவில் அவர்களே உதவுவர்.* மனிதனுக்கு பகைவர் வெளியில் இல்லை. அவை பயம், சந்தேகம், சோம்பல் என்னும் பெயரில் ஒளிந்து கிடக்கிறது. தைரியமூட்டுகிறார் தேசியக்கவி