வேண்டாமே பேராசை
* பேராசையால் நற்குணம் நம்மை விட்டு விலகும். * பொறுமையைக் கடைபிடிப்பவனே சிறந்த மனிதன். * அடக்கமுடன் வாழ்ந்தால் மறுபிறவியிலும் நன்மை கிடைக்கும். * பாவத்திற்கான தண்டனை பெறாமல் சொர்க்கம் செல்ல முடியாது. * முன்யோசனையுடன் பேசினால் மதிப்பு உயரும். * தன்னுயிர் போல எல்லா உயிரையும் நேசியுங்கள். * கோபம் அன்பை அழிக்கும். பொறாமை அனைத்தையும் அழிக்கும். * இகழ்ந்து பேசினாலும் கோபம் கொள்ளாதவரே அறிவாளி. * பாவச்செயல்கள் துன்பத்தை தரும். * மனத்துாய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. * புல்லில் விழும் பனி போல வாழ்க்கை நிலையற்றது. * உண்மை பேசுபவன் பெற்ற தாய் போல நம்பத் தகுந்தவன். * செய்த தவறை ஒத்துக் கொள்வதால் மனச்சுமை தீரும். * ஏமாற்றுதல் என்பது சிறிய முள்; அதை அகற்றுவது கடினம். * மவுனமாக இருக்கப் பழகினால் மனம் கலங்காத நிலை பெறும். * நல்ல நம்பிக்கை இல்லாமல் நல்லறிவு வராது. நல்ல அறிவின்றி ஒழுக்கம் வாய்க்காது.* அகிம்சையே அனைத்திலும் மேலான தர்மம். எச்சரிக்கிறார் மகாவீரர்