உள்ளூர் செய்திகள்

அமைதியுடன் வாழ...

* போற்றுதலையோ, துாற்றுதலையோ செவி சாய்க்காமல் இருப்பதே அமைதிக்கான வழி. * நெருப்பின்றி எப்படி சமையல் இல்லையோ அது போல ஞானம் இன்றி மோட்சம் இல்லை.* ஐம்புலன்களை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுளைக் காண முடியும்.* தர்மம் செய்வதால் மனம் துாய்மை பெறுவதோடு புண்ணியமும் சேரும்.* செல்வம் என்பது பணம் சேர்ப்பதல்ல. எதிலும் மனநிறைவு காண்பதே.* உதட்டில் வெளிப்படாமல் உள்ளத்தில் வெளிப்படுவதே உண்மையான சிரிப்பு. * கெட்டதைச் செய்பவன் பார்வையற்றவன்; நல்லதை கேட்காதவன் கேட்கும் திறன் இல்லாதவன்.* இனிமையாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்தாதவன் பேசத் தகுதியில்லாதவன்.* பேச்சை குறைப்பது, உடைமையைத் துறப்பதே துறவுக்கு அடிப்படை.* பொருள் மீது பற்று குறைய நல்லோருடன் பழக வேண்டும்.* எப்போதும் சந்தோஷமாக இருப்பவனே முமுமையான மனிதன். * ஒளியின்றி எப்படி காண முடியாதோ, அது போல ஆராய்ச்சி இன்றி அறிவைப் பெற முடியாது. * மனிதனின் வாழ்வு, இறப்பு, வறுமை, செழுமை எல்லாம் கடவுளின் செயல்.* பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெறும் தோற்றமே என்னும் தெளிவு வேண்டும்.* கருமித்தனம் இருப்பவனிடத்தில் எல்லா நற்குணங்களும் அழியும். * ஒருவனின் ஆணவம் பெரும் தீமைகளை விளைவிக்கும்.* மற்றவரிடம் உள்ள நற்குணங்களை மட்டுமே நாம் காண வேண்டும்.வழி காட்டுகிறார் ஆதிசங்கரர்