பிள்ளையார்பட்டி ஹீரோ
UPDATED : செப் 17, 2012 | ADDED : செப் 17, 2012
விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்யம் செய்யப்படுகிறது. விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். கற்பகவிநாயகரின் கையில் சிவலிங்கம் உள்ளது. தியானநிலையில் இவர் வீற்றிருக்கிறார்.