ராஜராஜேஸ்வரி
அகில உலகத்தையும் அரசாட்சி செய்யும் ராஜராஜேஸ்வரி மதுரை போக்குவரத்து நகரில் அருள்பாலிக்கிறாள். இவளையும் இவள் முன்புள்ள மகாமேருவையும் தரிசித்தால், பக்தர்களின் கோரிக்கை நிறைவேறும் என்பது நம்பிக்கை.தல வரலாறு:மனிதனுக்கு தேவை கல்வி, செல்வம், வீரம். இந்த மூன்றையும் வழங்கக்கூடிய சரஸ்வதி, லட்சுமி, துர்க்கையை ஒரே சன்னதியில் பிரதிஷ்டை செய்ய இப்பகுதி பக்தர்கள் ஏற்பாடு செய்தனர். அத்துடன், உலகையே ஆளும் லோகமாதாவான ராஜ ராஜேஸ்வரிக்கு தமிழகத்தில் கோயில்கள் குறைவு என்பதால், அவளது சிலையையும் பிரதிஷ்டை செய்ய விரும்பினர். ராஜ ராஜேஸ்வரி மிகவும் சக்தி வாய்ந்தவள் என்பதால், அவளது சக்தியை உள்ளடக்கிய மகாமேரு அவள் முன்னால் அமைக்கப்பட்டது. சிறப்பம்சம்:இங்குள்ள அம்மன் மூன்றரை அடி உயரம் உடையவள். வலதுகால் தொங்கவிட்டு இடதுகால் மடக்கியிருக்கிறாள். வலது கையில் நீலோத்பவ மலரும், இடது கையில் கரும்பும், பின்னங்கைகளில் பாசம், அங்குசமும் வைத்திருக்கிறாள்.. அம்மனின் முன் சிம்மத்திற்கு பதில் நந்தி வாகனம் அமைந்துள்ளது. கன்னிமூலையில் விநாயகர் எழுந்தருளி சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருள்பாலிக்கிறார். பிற சந்நிதிகள்:இங்கு சுந்தர மகாலிங்கம், பாண்டிய விநாயகர், முருகன், வெங்கடாஜலபதி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், கருப்பண்ணசுவாமி, மகாலட்சுமி, சிவதுர்கை, சரஸ்வதி, பரிகார விநாயகர், தட்சிணாமூர்த்தி, வாராஹி, நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. பரிகார விநாயகருக்கு 21 நாள் காலையில் அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல பிரார்த்தனை நிறைவேறும்.பிரார்த்தனை :திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, நினைத்த காரியம் நிறைவேற ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். தங்களது வேண்டுதல் நிறைவேற,ஸ்ரீசக்ர ராஜ ஸிம்மாஸனேச்வரீஸ்ரீ லலிதாம்பிகையே புவனேச்வரீ ஆகம வேத கலாமய ரூபிணிஅகில சராசர ஜனனி நாராயணீநாக கங்கண நடராஜ மனோஹரீஞான வித்யேச்வரீ ராஜராஜேச்வரீ என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்து பலனைடைகின்றனர். நேர்த்திக்கடன்:பக்தர்கள் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தும், பூப்பாவாடை சாற்றியும், சர்க்கரை பொங்கல் படைத்தும், ஊஞ்சல் சேவை செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.இருப்பிடம்: மதுரையிலிருந்து காரியாபட்டி செல்லும் வழியில் 15கி.மீ. தூரத்தில் சின்ன உடைப்பு. இங்கிருந்து கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் போக்குவரத்து நகர்.திறக்கும் நேரம்: காலை 5.30-10.30, மாலை 6- இரவு 8. போன் :93452 92986, 95970 53429.