உள்ளூர் செய்திகள்

மவுனத்தால் அதிக நன்மை

செப்.5 - பிறந்த தினம்* பேசுவதை விட சில நேரத்தில் மவுனத்தால் அதிக நன்மை கிடைக்கும்.* மனம், உடலைப் போல மனிதன் உயிருக்கும் மதிப்பளிக்க வேண்டும். * மனித தன்மை நிறைவு பெறும் நிலையில் ஆன்மிகத்தின் உச்சியை அடையலாம். * பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆன்மிகம் கல்வி அவசியம். * அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தனத்தில் தள்ளி விடும். * ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தின் அடையாளம். * கல்வியாளராக இருந்தாலும் ஆன்மிக சிந்தனை இல்லாவிட்டால் பயனில்லை.* கடவுளை தேடுவதாக இருந்தால் உங்களின் இதயத்தில் தேடுங்கள். * சுயநலத்தை ஒழித்தால் சமுதாயமே உயர்ந்து விடும். * நம் குணத்தை உருவாக்குவதில் உணவுக்கு முக்கிய பங்குண்டு. * வெளியில் தெரியும் வறுமையை விட, மனதிலுள்ள வறுமையே அபாயமானது. * ஆயுதத்தை விட தீய கருத்து அதிக தீமையை ஏற்படுத்தும்.* பழி வாங்கும் எண்ணத்துடன் யாரையும் அணுகக் கூடாது. * விருப்பு வெறுப்பு இல்லாத மனிதன் நலமுடன் வாழ்வான்.* கட்டுப்பாடும், கடும் உழைப்பும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.சொல்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்