சிறந்த அறம் இதுவே
* மனதில் எவ்வித கெட்ட சிந்தனையும் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.* மனவலிமை, மக்களை காத்தல், விடாமுயற்சி, ஆட்சி முறை, நல்ல நுால்களைக் கற்றல் ஆகிய ஐந்தும் உடையவரே சிறந்த அமைச்சர்.* மனதை அது போகும் போக்கில் செல்லவிடாமல் நல்ல வழியில் செலுத்துவதே அறிவாகும்.* நல்ல செயலிற்கு மன உறுதியே வேண்டும். மற்றவை எதுவும் பயன்படாது.* ஒருவரின் தோற்றத்தைக் கண்டு இகழாதே. பெரிய தேருக்குச் சிறு அச்சாணிதான் முக்கியம். * தன்னைவிடத் தன் குழந்தைகள் அறிவுடையோர் என்றால் பெற்றோருக்கு அதுதான் மகிழ்ச்சி.* அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.* அடுத்தவர் பொருளை திருடலாம் என நினைப்பது கூடத் தீமையானது.* உயர்வான சிந்தனையை உருவாக்கு. அதை அடையாவிட்டாலும் அந்த சிந்தனையே மனநிறைவைத் தரும்.* உன் மனம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும், யாருக்கும் சிறிதளவுகூடச் செய்யாதே. * வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச் சொல்லுதல் ஆகும். * செயல் வேறு, சொல் வேறு என்று உள்ளவருடன் நட்பு கொண்டால், கனவில்கூட அவரால் நன்மை கிடைக்காது. * உன்னிடம் உள்ளதைக் கொண்டு ஒரு செயலைச் செய். அது மலை மீது நின்று பாதுகாப்பாக யானைப் போரைக் காண்பதற்கு சமம். * முயற்சி செய்தால் செல்வம் பெருகும். இல்லையெனில் வறுமையே வந்து சேரும். சொல்கிறார் திருவள்ளுவர்