உள்ளூர் செய்திகள்

ஞானத்தின் அடையாளம் இதுவே

பிறந்த நாள் - பிப்.18* ஞானத்தின் முதல் அடையாளம் அமைதி. இரண்டாவது ஆணவமின்மை. * எல்லா உயிர்களையும் நேசிப்பவனே உயர்ந்த மனிதன்.* பொன், பெண், மண் மீது வைக்கும் பற்று அறிவை கெடுக்கும்.* பசுவை நோக்கி ஓடும் கன்று போல மனமும் கடவுளைக் காண ஏங்க வேண்டும். * அதிகமாகப் படித்தால் விவாதம், தர்க்கம் செய்யும் எண்ணம் உண்டாகும். * கள்ளம் கபடமற்றவர்கள் கடவுளை எளிதில் அடையும் பேறு பெறுவர். * ஒருவரின் எண்ணம் எப்படியோ அப்படியே கடவுளும் அருள்புரிகிறார். * படிப்பதை விட கேள்வி ஞானம் உயர்ந்தது. கேட்பதை விட நேரில் காண்பது உயர்ந்தது. * கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தாலும் கடவுளை அறிய முடியாது. * குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு கடவுளை சிந்திப்பவனே வீரபக்தன். * கடவுளிடம் பக்தி செலுத்துவது ஒன்றே மனித வாழ்வின் சாரம். * தீய எண்ணம் இருக்கும் வரையில் துாய பக்தி உண்டாகாது. * கடவுளை அடைந்த பின்னர் உலகப்பொருள்களில் மயக்கம் தோன்றாது. விளக்குகிறார் ராமகிருஷ்ணர்