மகிழ்ச்சியின் அளவுகோல் எது
* உண்மையான மகிழ்ச்சி என்பது எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதில் இல்லை. எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில் இருக்கிறது.* சுய அறிவுடன் திட்டமிட்டு செயலாற்று பவனுக்கு எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும். * வீட்டிற்கு ஒளி தரும் விளக்கே வீட்டை எரிக்கவும் செய்யும்.* தாமரையிலே உருண்டோடும் பனித்துளி போன்றது மனித வாழ்க்கை.* மண்ணிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது ஒரு மரத்திற்கு சுதந்திரம் ஆகாது.* ஆபத்திலிருந்து பாதுகாக்கும்படி கடவுளிடம் வேண்டாதீர்கள். அதை எதிர்கொள்ளக் கூடிய மனதை வேண்டுங்கள். அதுதான் சரியான வேண்டுதல்.* கடவுளிடம் வெற்றியை மட்டுமே கேட்டு உங்களை நீங்களே கோழையாக்கி கொள்ளாதீர்கள்.* காணிக்கைகளுடன் வரும் போது தான் கடவுளை சந்திக்க முடியும். தேவைகளுடன் வரும் போது அல்ல.* கல், மண்ணால் கட்டப்பட்ட சிறையைக் காட்டிலும் கொடுமையான சிறை, ஒரு மனிதனை இழிவுபடுத்தி வைத்திருக்கும் மனச்சிறை.* உயர்ந்த பண்பாடு என்னும் கூண்டுக்குள் நம்மை நாமே பூட்டிக்கொண்டு, நேர்மை எனும் சட்டதிட்டங்களை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இருக்கும்.* கடமையும் அன்பும் ஒன்று சேரும் போது தான், அந்த அன்பு வேரூன்றி நிற்கும்.விளக்கம் தருகிறார் தாகூர்