உழைப்பதும் ஒரு சுகமே
* உழைத்து வாழ்வதில் தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது. * உள்ளத்தில் அன்பு இல்லாமல் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதார சக்தி.* உள்ளத்தில் நேர்மை, தைரியம் இருந்தால் செல்லும் பாதை நேரானதாக இருக்கும். * எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு. கல்வி, செல்வம், வீரம் அனைத்தும் துணிவால் பெற முடியும். * கடவுள் என்னும் ஒன்று மட்டுமே உண்மை. உயிர்கள் எல்லாம் அதன் பிம்பங்களே. * கவலை, பயத்திற்கு இரையாகிவிடாதே. கடவுளை நம்பி பணியைச் செய். * அறிவிலும், செயலிலும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடு. * எங்கும், எப்போதும் நேர்மையை பின்பற்றி வாழ்ந்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.* உலகம் வியக்கும் விதத்தில் உனக்கு நன்மை கிடைக்க வேண்டுமா... கடவுளை வழிபடு. * எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் சொல்கின்றன. ஆனால் அனைவருக்கும் ஒரே சாஸ்திரம் பொருந்தாது.* தியானப்பயிற்சியால் மனதில் நல்ல சிந்தனை படிப்படியாக வளரும். * தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்காதே. மனதை விரும்பியபடி மாற்றும் வலிமை அதற்குண்டு. என்கிறார் பாரதியார்