உள்ளூர் செய்திகள்

தலை வணங்காமல் நீ வாழலாம்

* மனிதன் தன்னை அறிந்தால் யாருக்கும் தலை வணங்காமல் வாழலாம். * பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.* மனதிலுள்ள பிரச்னைகளை அறியவும், சரி செய்யவும் தியானம் ஒன்றே வழி.* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சிக்கு மயங்காதவனே ஞானி.* ஆசை ஒழியும் போது தாமரை இலை தண்ணீர் போல துன்பம் நம்மை தீண்டாது. * எளிமை, கண்ணியம் இரண்டும் தான் பண்பட்ட மனிதனின் அடையாளம்.* தடைகள் இல்லாவிட்டால் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாக நேரிடும்.* உடல், நாக்கு, மனதை அடக்கியாள்வதே உண்மையான அடக்கம். * ஒருவனுக்கு வரும் நன்மை, தீமைக்கு அவனவன் செயல்களே காரணம். * அன்பே உலகின் மகாசக்தி. இந்த உண்மை புரிந்தால் வாழ்வு மேம்படும். * அடக்கம் இன்றி நுாறாண்டு வாழ்வதை விட, ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.* வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் அமைதி தருவதாக இருக்க வேண்டும்.* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம். * மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையில் பரவும். நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.வழிகாட்டுகிறார் புத்தர்