உள்ளூர் செய்திகள்

16

ஆதிசங்கரர் அருளிய பிரஸ்னோத்தர ரத்னமாலிகா என்ற நூலில் இடம்பெற்றுள்ள கேள்வி பதில்களில்... இதோ 16 மட்டும்.எது இதமானது - தர்மம்எது நஞ்சு - பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பதுஎதிரி யார் - சோம்பல்எல்லோரும் பயப்படுவது எதற்கு - இறப்புக்குகுருடனை விடக் குருடன் யார் - ஆசையுள்ளவன்சூரன் யார் - கெட்டவழியில் மனம் செல்லாமல் அதை அடக்குபவன்மதிப்புடன் வாழ என்ன செய்வது - யாரிடமும் எதையும் கேட்காமல் இருப்பதுஎது துக்கம் - மனநிறைவு இல்லாமல் இருப்பதுஉயர்ந்த வாழ்வு எது - தவறு செய்யாமல் இருப்பதுநிலையில்லாதவை எவை - இளமை, செல்வம், ஆயுள்எது இன்பம் தரும் - நல்லவர்களின் நட்புவிலை மதிப்பற்றது எது - காலம் அறிந்து செய்யும் உதவிஇறக்கும் வரை உறுத்துவது எது - நம்பிக்கை துரோகம்உலகத்தை வெல்பவன் யார் - உண்மையும் பொறுமையும் உள்ளவன்செவிடன் யார் - நல்லதைக் கேட்காதவன்நண்பன் யார் - பாவ வழியில் போகாமல் தடுப்பவன்- க. ஜெயந்தி