வித்தியாசமான வியாபாரி
UPDATED : பிப் 24, 2017 | ADDED : பிப் 24, 2017
மகான் குருநானக்கிற்கு 17 வயது ஆன போது, அவரது தந்தை கல்யாண்தாஸ் பேடி, “வாழ்க்கைக்கு பணம் அவசியம். அதற்காக விவசாயம் அல்லது வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்'' என்றார். அதற்கு நானக், “தந்தையே... நான் விவசாயம், வியாபாரம் இரண்டும் செய்கிறேன். என் உள்ளமே வயல். அதில் தியானம் என்னும் விதை விதைத்து தெய்வீகம் என்னும் பயிரை விளையச் செய்வேன். என் உடல் என்னும் கடையின் மூலம் தெய்வீகம் என்னும் பொருளை உலகிற்கு வழங்குவேன். அதன் மூலம் பேரானந்தம் என்னும் லாபத்தை ஈட்டுவேன்,” என்றார்.