உன்னதமான உதி
UPDATED : ஜன 22, 2021 | ADDED : ஜன 22, 2021
மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் வாழ்ந்த மகான் சாயிபாபா. 1858 முதல் 1918 வரை 60 ஆண்டுகள் பாபா ஷீரடியில் வசித்தார். இவர் தங்கிய பாழடைந்த மசூதி 'துவாரகாமாயி' என அழைக்கப்படுகிறது. அவர் பயன்படுத்திய பல பொருட்கள் இங்கு வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள 'துனி' என்னும் நெருப்புக் குண்டத்தில் கிடைக்கும் சாம்பல் 'உதி' என்னும் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பாபாவின் அவதார தினமாக கருதப்படும் ராம நவமியும், சமாதி அடைந்த தினமான விஜயதசமியும் இங்கு சிறப்பாக நடக்கும். உலகிற்கு நல்வழி காட்டிய குருநாதரான இவருக்கு குருபூர்ணிமா விழாவும் மூன்று நாள் கொண்டாடப்படுகிறது. குரு வாரமான வியாழனன்று இவரை வழிபடுவது சிறப்பு.