உள்ளூர் செய்திகள்

அம்மாவுக்கு ஒரு கோவில்

பெற்று வளர்த்த தாய்க்காக எழுப்பப்பட்ட பழமையான கோவில் திருச்சி மாவட்டம் பழையாறில் உள்ளது. இந்த ஊர் பஞ்சமாதேவீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. முதலாம் ராஜேந்திரசோழன் தன் தாய் பஞ்சவன் மாதேவிக்காக இந்த கோவிலைக் கட்டினான். தாய் மீது கொண்ட பாசத்தாலும், பக்தியாலும் மன்னர் கட்டிய கோவில் இது.