உள்ளூர் செய்திகள்

ஒருநாள் மட்டும் தொடும் மரம்

அரசமரத்தைக் காலை வேளையில் வலம் வர வேண்டும். சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் அதைத் தொடக்கூடாது. இதிலுள்ள சுள்ளியை ஹோமம் தவிர மற்ற பயன்பாட்டுக்கு ஒடிக்கக்கூடாது. அரச சமித்துக்களை, மந்திர பூர்வமாக அக்னியில் இட்டு, அந்த ஹோமப்புகை வீட்டில் பரவினால் தீயவை அகன்று நன்மை ஏற்படும். அரசும், வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர் உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இதை வலம் வரும்போது நம் உடலிலுள்ள சில சுரப்பிகள் தூண்டப்படுகின்றன. குழந்தை இல்லாத பெண்களின் கருப்பையிலுள்ள பிரச்னைகள் நீங்கி கருத்தரிக்க உதவுகிறது.