உள்ளூர் செய்திகள்

தங்க குடத்தில் அபிஷேகம்

பூலோக வைகுண்டம் எனப்படுவது ஸ்ரீரங்கம். இங்கு 30 அடி நீளம் கொண்ட கருவறைக்குள், 21 அடி நீளத்தில் கரிய திருமேனியாக பெரிய பெருமாள், தென்திசை நோக்கி யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். இந்த பெரிய பெருமாளுக்கு ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் (ஜூலை 7) சிறப்பாக நடக்கும். இதையொட்டி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றின் அம்மா மண்டப படித்துறையில் இருந்து 22 தங்க குடங்களில் புனித நீரை எடுத்து யானை மீது வைத்து கொண்டு வருவர்.அகில், சந்தனம் கலந்த கலவையால் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்வர். அதன்பின் உற்சவர் நம்பெருமாளுக்கு தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித் தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். இந்த அபிஷேகத்தை காவிரிஅன்னை செய்வதாக ஐதீகம்.