ஆயி மகமாயி
UPDATED : செப் 30, 2011 | ADDED : செப் 30, 2011
அம்பிகையை, 'ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்' என்று போற்றுவர். உயிர்களுக்கு எல்லாம் தாயாக இருப்பதால் 'ஆயி' என்று அவளுக்குப் பெயர். பிரபஞ்சம் எங்கும் அவளுக்கு கண்கள் இருக்கின்றன. இதனால், 'கண்ணாத்தாள், கண்ணுடைய நாயகி, ஆயிரம் கண்ணுடையாள்' என்றெல்லாம் குறிப்பிடுவர். பாரதியாரும் பராசக்தியை, 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று போற்றுகிறார். மாயவனின் தங்கையாக இருப்பதால் அவளுக்கு 'மாயி' 'மகமாயி' என்றும் பெயருண்டு.