உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்கள் திருநட்சத்திர வைபவம்

ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அவதரித்த திருநட்சத்திரம் ஐப்பசியில் வருவது சிறப்பு. பொய்கையாழ்வார் திருவோணத்திலும், பூதத்தாழ்வார் அவிட்டத்திலும், பேயாழ்வார் சதயத்திலும் அவதரித்தனர். ஒருவரை ஒருவர் அறியாதவர்களான இவர்களை ஒன்று சேர்க்க, திருமால் விருப்பம் கொண்டார். திருக்கோவிலூர் என்னும் திவ்யதேசத்திற்கு யாத்திரையாக மூவரும் தனித்தனியே வந்திருந்தனர். அன்றிரவில், ஒரு வீட்டின் திண்ணையில் மூவரும் தங்க நேர்ந்தது. அப்போது திருமால் அவர்களுக்கு காட்சியளித்தார். பக்தி வெள்ளத்தில் திளைத்த மூவரும் திருமால் மீது ஆளுக்கு 100 பாடல் பாடினர். இவையே முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதி என பெயர் பெற்றது. இவர்களின் திருநட்சத்திர வைபவம் அக்.28, 29, 30ல் பெருமாள்கோயில்களில் நடத்தப்படும்.