நந்தி விலகிய அம்மன் கோவில்
UPDATED : ஜூலை 14, 2016 | ADDED : ஜூலை 14, 2016
வைத்தீஸ்வரன் கோவில் அருகிலுள்ள திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவிலில் நந்தனாருக்காக நந்தி விலகியது தெரிந்த விஷயமே. ஆனால், அம்மன் கோவில் ஒன்றிலும் இதைப் போல நந்தி சன்னிதியை விட்டு விலகியிருக்கிறது. திருவாரூர் நாகபட்டினம் ரோட்டிலுள்ள கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் நந்தி விலகிய நிலையில் காட்சியளிக்கிறது.