அம்மனுக்கு அப்பம்
UPDATED : ஜூலை 20, 2020 | ADDED : ஜூலை 20, 2020
தென் மாவட்டங்களில் ஆடி செவ்வாய், வெள்ளி காலை உணவாக 'கனகப்பொடி அப்பம்' என்னும் ரொட்டியை உண்பர். இதை தயாரிக்க பச்சரிசி, தவிடு, வெல்லத்தை தண்ணீர் விட்டு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைய வேண்டும். மாவை சற்று கனமாகத் தட்டி கல்லில் நெய் விட்டு சுட வேண்டும். அம்மனுக்கு படைத்த ரொட்டியை மட்டும் உணவாக சாப்பிடுவர்.