கோபமா....வரவே வராது!
UPDATED : மே 25, 2017 | ADDED : மே 25, 2017
முருகன் சூரபத்மனைக் கொல்லாமல், இரக்கமுடன் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் வாகனம், கொடியாக மாற்றிக் கொண்டார். இதனை 'சூரனுக்கு பெருவாழ்வு அளித்தவர்' என முருகனைப் போற்றுவர். இரக்கம் மிக்க முருகன், கேட்ட வரம் எல்லாம் கொடுக்கும் தெய்வம் என கந்தபுராணம் கூறுகிறது.ஒருவரிடம் ஒருமுறை உதவி கேட்கலாம்... இருமுறை கேட்கலாம்... கோடி முறை கேட்க முடியுமா என்றால் அப்போதும் முருகன் அருள்புரிவார் என்கிறது திருப்புகழ். கோடி முறை வேண்டுதல் வைத்தாலும் முருகன், அடியார்களிடம் கோபம் கொள்வதில்லை. 'அடியார் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமானே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார்.