உள்ளூர் செய்திகள்

தொட்டது துலங்க...

தட்சிணாயன புண்ணிய காலமான ஆடியில் விவசாயிகள் உழவுப்பணி துவங்குவர். 'ஆடிப் பட்டம் தேடி விதை' என்பார்கள். நாடு செழிக்க நதிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிப்பெருக்கை முன்னோர்கள் தேர்ந்தெடுத்தனர். தொட்டது துலங்கும் இந்நாளில் செய்யும் முயற்சிகள் இனிதே நிறைவேறும். காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதிதாக திருமணமானவர்கள் புதுமஞ்சள் கயிறு மாற்றுவர். தோட்டப்பயிர்களான அவரை, பீர்க்கு, புடலை போன்றவற்றை விதைப்பர்.