உள்ளூர் செய்திகள்

பெற்றோரின் பொறுப்பு

ஆவணி அவிட்டத்தை பெரும்பாலும் புதுப்பூணுால் அணியும் நாளாக கருதுகிறார்கள். உண்மையில் பூணுால் மாற்றுவது என்பது உபாகர்மாவின் அங்கம் மட்டுமே. அதற்குரிய அடையாளம் மட்டுமே பூணுால் மாற்றுவது என்பது. பூணுால் அணிந்த பின் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது வழக்கம். மனதிற்குள் காம சிந்தனை நுழைவதற்குள் காயத்ரி தேவி நுழைந்து விட வேண்டும் என்பர். இதனை ஜபிப்பதால் மனமும், உடலும் பரிசுத்தம் பெறும். அதன் மந்திர தன்மையால் உண்டாகும் ஆன்மிக அதிர்வலை உலகிற்கு அளப்பரிய நன்மை அளிக்கும். வேதம் நமக்கு கிடைத்த பெருஞ்செல்வமான காயத்ரி ஜபத்தை சந்ததிகளிடம் சேர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.