உள்ளூர் செய்திகள்

எதிரிக்கும் கருணை

முருகன் மயில் மீது அமர்ந்திருக்கிறார். அது தோகை விரித்தால் 'ஓம்' போல் தோன்றும். 'ஓம்' என்றால் 'எல்லாம் நானே' என பொருள்படும். முருகன் அனைத்துக்கும் அனைத்துமானவர். ஆணவம் என்ற பாம்பை தனது கால்களுக்குள் மயில் அடக்கியிருக்கும்.மனிதனும் ஆணவத்தை விட்டு முருகனை சரணடைந்தால், எல்லா நன்மையும் பெறலாம். சூரனை வென்ற முருகன், அவனைக் கொல்லவில்லை. இரண்டாக கிழித்து ஒரு பகுதியை மயிலாகவும், ஒரு பகுதியை சேவலாகவும் மாற்றிக் கொண்டார். மயிலை தனது வாகனமாக்கி ஆணவமிக்க சூரனை அடக்கினார். எதிரியாக இருந்தாலும் அவனுக்கும் கருணை காட்ட வேண்டும் என்பதே நோக்கம்.