பிரிந்தவர் சேர...
UPDATED : செப் 01, 2024 | ADDED : செப் 01, 2024
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் திருநோக்கிய அழகியநாதர் என்னும் பெயரில் சிவன் குடிகொண்டிருக்கிறார். சிவனை துளசியால் மகாலட்சுமி பூஜித்த தலம் இது. இதனடிப்படையில் திங்கள் அன்று இங்கு துளசி அர்ச்சனை நடக்கிறது. பிரதோஷ நாளில் இங்குள்ள இரண்டு மரகத லிங்கங்களுக்கு பூஜை நடக்கும். இதை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதி சேர்வர்.