உள்ளூர் செய்திகள்

சத்தியம்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சிவபூஜை செய்ய இந்திரன் தினமும் நள்ளிரவில் வருகிறார். இதற்காக பூஜை பொருட்களை கருவறையில் வைத்து விட்டு அர்ச்சகர்கள் சென்று விடுவர். மறுநாள் காலையில் நடை திறக்க வரும் போது, “அகம் கண்டதைப் புறங்கூறேன். இது சத்தியம்” என சொல்லி நடையை திறப்பர். அதாவது, “இந்திரன் பூஜை செய்யும் போது பார்த்த விஷயத்தை பிறரிடம் சொல்ல மாட்டேன்” என்பது பொருள்.