தொண்டு மையம்
UPDATED : செப் 01, 2024 | ADDED : செப் 01, 2024
ஆன்மிகப்பணியுடன் சமுதாயத் தொண்டாற்றும் மையமாக கோயில்கள் இருந்தன. கல்வெட்டுகள், செப்பேடுகள் என வரலாறை விளக்கும் ஆவணப்பதிவு அலுவலகம், ஏழைகளுக்கு உணவிடும் அறச்சாலை, வேதத்தை போதிக்கும் பாடசாலை, இசை, நடனம், கூத்துக்களை நடத்தும் கலாசாலை, தலவிருட்சம் உள்ளிட்ட மரங்களை பாதுகாக்கும் நந்தவனம், நோய் தீர்க்கும் மருத்துவசாலை, சிற்பங்களைப் பேணும் கலைக்களஞ்சியம், இயற்கை சீற்றத்தின் போது மக்களை பாதுகாக்கும் கோட்டை என எத்தனையோ தொண்டுகள் கோயில்கள் மூலம் நடந்தன.