அவல்
UPDATED : செப் 01, 2024 | ADDED : செப் 01, 2024
கேரளாவில் தலைச்சேரி அருகிலுள்ள திருவெண்காடு ராமசாமி கோயிலில் உள்ள அனுமனுக்கு பழம், பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்த அவல் நைவேத்யம் செய்யப்படுகிறது. தமிழக பக்தர்கள் இவருக்கு வடை மாலை சாத்துகின்றனர். ராமர் சன்னதிக்கு எதிரில் வணங்கும் நிலையில் கைகூப்பியபடி இருக்கிறார்.