அரசு வகையில் நன்மைக்கு..
UPDATED : செப் 05, 2024 | ADDED : செப் 05, 2024
அரசு சம்பந்தமான வேலை முடிவதில் தடையா... கடலுார் மாவட்டம் பள்ளிப்படை விநாயகரை தரிசியுங்கள். இப்பகுதியில் உள்ள புறம்போக்கு பகுதியில் சிலர் வீடு கட்டியிருந்தனர். அந்த வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். அன்றிரவு விநாயகர் பக்தர் ஒருவர் கால்போன போக்கில் நடக்கும் போது கல் ஒன்று இடித்தது. அது விநாயகர் சிலையாக இருந்தது. அவரை வழிபட்டதன் பயனாக அவருக்கு இலவச வீட்டுமனை கிடைத்தது. இதன் அடிப்படையில் உருவானதே இக்கோயில். இங்கு வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். எப்படி செல்வது: சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணிதொடர்புக்கு: 80153 11214, 94434 81914