உள்ளூர் செய்திகள்

வேண்டியது கிடைக்க...

தாயின் மடியில் அமர்ந்திருக்கும் திருப்பூர் சக்தி விநாயகரை தரிசித்தால் வேண்டியது கிடைக்கும். கோயில் கட்ட முடிவு செய்த போது தாயின் மடியில் அமர்ந்தபடி விநாயகர் இருந்தால் நன்றாக இருக்கும் என ஸ்தபதி சொன்னார். பிரசன்னம் பார்த்த போது உத்தரவு கிடைத்தது. அதன்படி சிலையை நிறுவினர். வேண்டியது கிடைக்க அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். தட்சிணாமூர்த்தி, துர்கை, லிங்கோத்பவர் சன்னதிகள் உள்ளன. கருவறைக்கு எதிரில் தலவிருட்சமான வில்வ மரம் உள்ளது.எப்படி செல்வது: திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94888 37111, 99421 22256