உள்ளூர் செய்திகள்

குழந்தை வரம் பெற...

குழந்தை இல்லையே என ஏங்குவோரின் மனக்குறையை போக்குபவர் திண்டுக்கல் கோபால சமுத்திரக்கரை விநாயகர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் தயிர் அபிஷேகம் செய்கின்றனர். பல ஆண்டுக்கு முன்பு பக்தர் ஒருவரின் முயற்சியால் அரசமரத்தடியில் கோயில் உருவானது. இக்கோயிலில் 200 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆன, 32 அடி உயர 'மகாசங்கடஹர சதுர்த்தி' விநாயகருக்கு சன்னதி உள்ளது. இவர் முன் திருவுளச்சீட்டு உத்தரவு கேட்கும் வழக்கம் இருக்கிறது. இங்குள்ள 'நன்மை தரும் விநாயகர்' சன்னதியில் 108 விநாயகர்களை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். எப்படி செல்வது: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணி தொடர்புக்கு: 98421 31524