தொழில் தொடங்க...
UPDATED : செப் 05, 2024 | ADDED : செப் 05, 2024
தொழில் தொடங்குவதில் தடை ஏற்படுகிறதா... புதுச்சேரி மணக்குள விநாயகர் இருக்க கவலை எதற்கு?புதுச்சேரி மணல் குளக்கரையில் விநாயகர் வழிபாடு நடந்து வந்தது. இங்கு ஆட்சி செய்த பிரெஞ்சுக்காரர்கள் விநாயகர் சிலையை கடலில் வீசி எறிய, அது மீண்டும் கரைக்கு வந்தது. தவறை உணர்ந்த அவர்கள் மீண்டும் கோயிலை உருவாக்கினர். மகாகவி பாரதியார் இந்த விநாயகருக்கு பாடல் பாடியுள்ளார். விநாயகருக்கு பள்ளியறை உள்ளது. புதுக்கணக்கு எழுதும் முன் இங்கு பூஜை செய்கின்றனர். எப்படி செல்வது: புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., நேரம்: காலை 6:00 - மதியம் 1:00 மணி; மாலை 4:00 - இரவு 10:00 மணிதொடர்புக்கு: 0413 - 233 6544