உயர்வுக்கு...
UPDATED : செப் 05, 2024 | ADDED : செப் 05, 2024
ராமநாதபுரம் உப்பூர் வெயிலுகந்த விநாயகரை தரிசித்தவர்கள் உயர்வது உறுதி. சிவனுக்கு எதிராக தட்சன் யாகம் நடத்தினான். அதில் பங்கேற்ற சூரியன் தன் பாவம் தீர இங்குள்ள விநாயகரை வழிபட்டார். இங்கு வந்த பின்னரே ராவணனிடம் இருந்து சீதையை மீட்டார் ராமர். இரண்டு யுகங்களாக இருக்கும் இந்த விநாயகர் மீது பஞ்ச ரத்தின கீர்த்தனை பாடினார் ஆதிசங்கரர். காசி ராமேஸ்வர யாத்திரையை இங்கிருந்தே தொடங்க வேண்டும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். சேதுபதி மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்ற இக்கோயிலில் பூக்குழி உற்ஸவம் பிரபலம். எப்படி செல்வது: ராமநாதபுரத்தில் இருந்து 30 கி.மீ., நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 76394 73521